யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் அவரைக் கோவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு…
Category: தமிழ்நாடு
தமிழ்நாடு புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க தேர்தல் துறை அனுமதி
அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கமளித்துள்ளார். அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று விளக்கமளித்துள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு, இது தொடர்பாக ர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தண்ணீர்பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எந்த விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு…
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கம், பீஹார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை, மிதமான மழை பெய்யும் என இருவேறு எச்சரிக்கை…
விருதுநகர் அருகே ஆவியூர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு
காரியாபட்டி பகுதி ஆவியூரில் உள்ள கல்குவாரியில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்து வெடி மருந்தை வேனில் ஏற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிதறிக்கிடந்த உடல்களை அடையாளம் கண்டதில், கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் குவாரியை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மே நாளில் உறுதியேற்போம்தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதல்வர் எக்ஸ் பக்கத்தில் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் மே தினத்தில் இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க ! மே நாளில் உறுதியேற்போம் உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
