பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. மே 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் போது கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.
Category: பொது செய்தி
இலங்கை அம்மன் கோவிலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சாமி தரிசனம்
இலங்கை நாட்டிற்கு சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று 27.05.2024 இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயம் மற்றும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்தில் இந்து மத குருமார் தலைவர் சுவாமி சிவாச்சாரியார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வுகளில் இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அரசியல் ஆலோசகரும் நேர்முக உதவியாளருமான திருமதி உமாச்சந்திர பிரகாஷ் உடனிருந்தார். முன்னதாக இந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர் சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் சட்டப்பேரவை தலைவர் அவர்களுடன் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜெயக்குமார் ரெட்டியார் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வருன் மற்றும் இராஜன்…
ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது இதன்மூலம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் கேளிக்கை அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் கேம்ஜோன் உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர். இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். தீ விபத்து குறித்து அறிந்த முதல் அமைச்சர் பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த விபத்து தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், ‘விபத்தில் சிறாா்கள் உள்பட இதுவரை 22 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல்…
6ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு- 58 தொகுதிகளில் 60 % வாக்குப்பதிவு
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் நேற்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.இந்நிலையில், மாலையில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மாநிலம் வாரியாக பீகார் – 52.24 சதவீதம், டெல்லி – 53.73 சதவீதம், அரியானா – 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் – 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் –…
.”என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்”: சோனியா காந்தி பேச்சு
”என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,” என்றார்.எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை…
தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு
தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு ம்பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள். இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக “வாக்கு ஜிஹாத்”…
மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ள- விண்ணப்பங்களை வரவேற்கும் நியூராலிங்க்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி…
விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழைவாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது
தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது.இன்று காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது.…
தனியார் இடத்தில் கோவில் கட்டி ஆஞ்சநேயரை மனுதாரராக சேர்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் , கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.டில்லி உத்தம் நகர் பகுதியில்,தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.