வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில் கனகசெட்டிக் குளம் தொடங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை 31 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதில் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை பிரசித்தி பெற்றது. இங்குள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருந்த கடற்கரையின் ஒரு பகுதி, திடீரென மாயமாகி விடுகிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி கடலில் காலநிலை மாற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய மத்திய அரசின் சென்னை…
Category: பொது செய்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
புதுச்சேரியின் தனிநபர் வருமானம் 7.61 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஆளுநர் உரையில் அறிவிப்பு
புதுச்சேரி.ஆக.1-புதுச்சேரி சட்டசபையின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது.புதுச்சேரி சட்டசபையில் 24-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15வது சட்டசபையின் 5வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன். 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது. ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர்…
புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் சவுந்தர்யா மரணம்
தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார். கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்…
அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரசார் போராட்டம்
அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அம்மாநில சட்டப்பேரவை கட்டிடமான விதான் சவுதாவுக்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்.ஜி.சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.14.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.…
2024-25-மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு; குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு ஆகியவை மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்: மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை…
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது. விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும்…
டெல்லியில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை. இதனால் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது. இந்த…
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் விலை ரூ.2,500-மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார். இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ஆம் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர்…
மத்திய பிரதேச இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை