சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது. அதன்படி தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்யவும், தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாகவும் அறிவித்தது. விருப்ப ஓய்வுபெறும் தொழிலாளர்கள் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு 25 சதவீத நிவாரணத்தொகையும், வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்து உடைமைகளை திருப்பி ஒப்படைத்தவுடன் மீதி 75…

பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மினி தமிழக அரசு முடிவு

மீண்டும் மினி பஸ்ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியீடு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர்,…

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி- காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும். இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான்…

தமிழக தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:- நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்…

மழையால் இந்தியா, கனடா டி20 உலகக் கோப்பை போட்டி ரத்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது. மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பங்கேற்று பல்வேறு ரெயில்வே துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்து கொண்டனர். இந்திய அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்ட சாதனையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் தற்போது வழங்கியுள்ளது.

புதுச்சேரி பாஜக தலைவர் பதவி விலக கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய பா.ஜனதா நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர். அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில்…

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. தற்போது அது காகங்கள் மூலமாகவும் பரவுவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.இதனால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.…