ஹேமா கமிட்டி அறிக்கை: நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? – மத்தியமைச்சர் ஜெ.பி. நட்டா கேள்வி

மலையாள திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல்கள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள அரசு இதனை மூடி மறைப்பதாகவும் விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் நீதி வழங்க தாமதப்படுத்துவது ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது, ஆட்டிப்படைப்பது எது? இந்தக் குற்றச்சாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது வருத்தம் அளிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள அரசு இதனை மூடி மறைக்க விரும்புகிறது. முதல்வர் இதனை வெளிக்கொண்டுவர உதவ வேண்டும்…

வயநாட்டில் சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்: எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி

வயநாடு மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும், அங்கு சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சில கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் காணொளி வாயிலாக சந்திப்பு நடத்தினார். அந்தச் சந்திப்பில் வயநாட்டில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும், சுற்றுலாத் துறையை மீட்பது குறித்தும் பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு, இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து…

பிரதமர் மணிப்பூர் செல்லவேண்டும்-காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை. முதல் மந்திரி பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுவதாக கூறுகிறார் என தெரியவில்லை.…

உ.பியை கலக்கும் சிகப்புத் தொப்பி அரசியல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றி அம்மாநில அரசியலிலும் பாஜகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கான்பூர் நகரில் கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசுகையில், சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிகப்பு என்பது உணர்வுகளின் நிறம். கடவுள் துர்கையின் நிறம். ஆனால் தற்போது அவர்கள் [பாஜக] நமது தொப்பியைக் கிண்டலடித்து வருகின்றனர். எங்களது தொப்பியைக் கிண்டலடிப்பதற்கு முன் அவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது. எங்களின் செயல்கள் நல்லவிதமாக உள்ளன. குறைத்தபட்சம் எங்களின்…

மாட்டு கறி சாப்பிட்டதாக இளைஞனை அடித்துக் கொலை செய்த பசு பாதுகாப்பு கும்பல்

அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த பீகாரைச் சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சாபிரை…

ஓடிபி கிடைப்பது இனி தாமதமாகும்! குறுஞ்செய்தியால் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் நடவடிக்கை

நவீன டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடிகள் நடந்து வருகிறது. மக்களின் செல்போனுக்கு வரும் கடவுச்சொற்களை பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பது, ஏதாவதொரு லிங்கை அனுப்பி அதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி பணத்தை எடுப்பது, அவர்களின் செல்போன் எண்களை செயலிழக்கச் செய்துவிடுவோம் என எச்சரிப்பது போன்ற பல மோசடிகள் நாள்தோறும் நடந்து வருகிறது. இது குறித்து பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மோசடிகள் நின்றபாடில்லை. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, எந்தவொரு வங்கிகள் மற்றும் ஆப்-சார்ந்த சேவைகள் போன்ற நிறுவனங்கள் கடவுச்சொற்களை (ஓடிபி) அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர், அதன் தலைப்பு மற்றும் தகவல்கள் மற்றும் தங்களது எண்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.…

ராமேசுவரம் மீனவர்கள் 2 பேருக்கு சிறை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ஆம் தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட…

தோழியுடன் தூங்கிய பெண் கழுத்து நெரித்துக் கொலை- காதல் கணவனிடம் போலீஸ் விசாரணை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்.எம்.வி. லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று நவ்யஸ்ரீ, தனது தோழியான ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நவ்யஸ்ரீ-யை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா, மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ, பிரச்சனையான திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.…

சென்னை பார்முலா கார் பந்தயம் பொதுமக்ககளுக்கு கடும் கட்டுபாடுகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பார்முலா கார் பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்பட மாட்டாது. கூர்மையான பொருட்களான பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல் ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள்-துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் லேசர்ஸ்-லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், ஒலி அமைப்புகள் – ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

மதுரையில் எய்ம்ஸ்- 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை…