சென்னையில் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது.மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்…
Category: இந்தியா
தமிழகத்துக்கு காவிரியில் 30 டி.எம்.சி. நீர் திறப்பு- துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்
மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட புறப்படுவதற்கு முன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். மேலும் 10 டி.எம்.சி. தண்ணீரை விடுவிப்போம். இந்த ஆண்டில் வழங்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி நதிப்படுகையில் உள்ள 1,657 ஏரிகளையும் நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 5.90 லட்சம் குவிண்டால் விதை, 27 லட்சம் டன் ரசாயன உரம், 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 25,000 கோடி கடனுதவியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.…
அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரசார் போராட்டம்
அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அம்மாநில சட்டப்பேரவை கட்டிடமான விதான் சவுதாவுக்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்.ஜி.சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.14.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.…
2024-25-மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு; குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு ஆகியவை மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்: மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை…
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா?- உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு கேள்வி
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு…
கன்வர் யாத்திரை கடைகளில் பெயர் பலகை வைக்கும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவிதிப்பு
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு சற்று சரிந்து மொத்தம் 63 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 2 அணைகளில் நேற்று முன்தினம் நீர்திறப்பு 45 ஆயிரம் கனஅடியாக சற்று…
உஜ்ஜைன் நகரில் கடை உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்க காவல்துறை உத்தரவு
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது…
திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது-நிதி ஆயோக் அமைப்பு பாராட்டு
2023-24-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24-ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான, மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர்…
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்- ஸ்டாலின்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் எனவும், ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில்,
