திராவிட இயக்கத்தின் 3வது குழல் விசிக- காஞ்சிபுரம் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு

காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “திராவிட கட்சியின் மூன்றாவது குழல்தான் விசிக என ஒருமுறை கருணாநிதி முன்னிலையில் கீ.வீரமணி குறிப்பிட்டார். அந்த வகையில் மூன்றாவது குழலாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் திமுக. அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்துடன் வீறு கொண்டு வெற்றி நடை போடும் இயக்கமாக 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. சமூக நீதி இயக்கமாக திமுக செயல்படுகிறது. பெரியார் வழியில் அறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தினார் அண்ணா. இந்தி திணிப்பை எதிர்த்தார் கருணாநிதி. தேசிய கல்விக் கொள்கையின்…

அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, ” மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்” என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி சியாமளா வீட்டில் ஒழிப்புத்துறை சோதனை

காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் சியாமளா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.