கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா

கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலமாக அங்கு ஐடி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.