தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால் இன்று (ஜூலை 16) காலையில் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 15-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடி நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த…