மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Category: முதன்மை செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள கேசினோவில்ல் பரிசு வென்றவர் திடீர் கோடீஸ்வரரான அதிர்ச்சியில் உயிரிழந்தார்
சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டாலர்களை [33 கோடி ரூபாய்] வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டாலர்களை வென்றுள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாடற்ற முடியவில்லை. அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என்று பின்னர் தெரியவந்துள்ளது. அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில்…
கேரளம்” ஆகிறது கேரளா- சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் “கேரளா” என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. “மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல்…
பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்
பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி…
மத்தியஅரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த சட்டசபையில் தீர்மானம்-முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-இப்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. பா.ஜ.க.வுடன் பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.ஏற்கனவே இடஒதுக்கீடு அமல்படுத்தி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வேட்பு மனுக்கள் பரிசீலனை
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ்,…
நெட் தேர்வு முறைகேடு விசாரிக்க சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்- 4 பேர் கைது
யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது. அப்போது காசியாதீக் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். பிறகு வாகனத்தில் இருந்த அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த…
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்குதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்துள்ளதால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். UGC தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ரத்தானதால் பெரும் பாதிப்பு.மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட், நெட் முறைகேடு விவகாரம்: தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம்
தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தலைவர் (இயக்குநர் ஜெனரல்) பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுபோத் குமார் கட்டாய காத்திருப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாக தகவல். தேசிய தேர்வு முகமையின் நிரந்தர தலைவரை நியமிக்கும் வரையில் பிரதீப் சிங் கரோலா அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும்…
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணை இஸ்ரோ தயாரிப்பில் புதிய சாதனை
கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ஸ்டேஞில் இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘புஷ்பக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
