முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்குதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்துள்ளதால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். UGC தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ரத்தானதால் பெரும் பாதிப்பு.
மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment