பெங்களூருவை சேர்ந்த தான்வி என்பவர் அமேசானில் X-Box கேமிங் சாதனைத்தை ஆர்டர் செய்திருந்த நிலையில், டெலிவரான பார்சலில் உயிருடன் பாம்பு இருந்ததால் அதிர்ச்சி வீடியோ வைரலானதை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அமேசான் நிறுவனம், அப்பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி
Category: முதன்மை செய்திகள்
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி ) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி ) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நாளந்தா பல்கலைக்கழ புதிய வளாகம் திறப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். நாளந்தா பல்கலைக்கழகம் நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.
உங்களின் அர்ப்பணிப்பு உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்”- ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்தியா கூட்டணியின் தலைவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ராகுலை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவுடன் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், ராகுல் காந்தி ஸ்டாலினை சகோதரன் அழைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அசாம் மாநில…
பிரதமர் மோடியின் “மனதின் குரல்” – மீண்டும் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகிறது. இதனை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறும். அனைவரும் உங்கள் யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.‘மனதின் குரல்’ நிகழ்ச்சி. கடந்த பிப்ரவரி 25-ல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்.
மோடி 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வாரணாசி சென்றார். 20 ஆயிம் கோடி ரூபாய்களை விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது. இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர். பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில்…
நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! முதல்வர் மகிழ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி! நாடும்…
எனக்கு வாக்களிக்காததால் முஸ்லிம், யாதவர்களுக்காக பணியாற்ற மாட்டேன்: ஜேடியூ தலைவர் வீடியோ பேச்சு வைரலானது
மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சித்தாமர்ஹி என்ற தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவேஷ் சந்திர தாகூர் வெற்றி பெற்றார். இவர் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அர்ஜூன் ராய் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில் முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி செய்ய மாட்டேன் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவேஷ் சந்திர தாகூர் பேசியதாக வெளியான வீடியோவில் “முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயானத்தினர் இங்கு வர விரும்பினால் அவர்களால் வர முடியும். வந்து டீ குடித்து, ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். பின்னர் சென்று விடலாம். ஆனால் எந்வொரு உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஐக்கிய…
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி- காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிப்பு
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும். இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான்…
மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார். நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி. 40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர். திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க…
