புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி 526 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்

பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும், 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது: புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 012 பேர் தேர்வு எழுதினர். இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம்,…

சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் அவரைக் கோவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு…

விருதுநகர் அருகே ஆவியூர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு

காரியாபட்டி பகுதி ஆவியூரில் உள்ள கல்குவாரியில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் இருந்து வெடி மருந்தை வேனில் ஏற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிதறிக்கிடந்த உடல்களை அடையாளம் கண்டதில், கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் குவாரியை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மே நாளில் உறுதியேற்போம்தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் எக்ஸ் பக்கத்தில் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் மே தினத்தில் இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க ! மே நாளில் உறுதியேற்போம் உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.