அசாமில் பெய்து வரும் கனமழைக்கு பல மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பாராக், குஷியாரா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அசாமின் திப்ருகர் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.