தமிழக ஆளுநருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
  • 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.
  • சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.
  • கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
  • அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.
  • ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
  • கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார்.
  • போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார்.
  • கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
  • குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.
  • இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

Related posts

Leave a Comment