கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேகர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.