சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் “நன்றி தங்கச்சி” சென்னை மெரினா காட்சி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் “பேல் பூரி” வாங்கிய யூடியூபர், ஓகே… தாங்க்யூ என்று கூறினார்.

what do you say for like sister in… என்று கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் “தங்கச்சி” என்று கூறுகிறார்.

younger sister is தங்கச்சி என்று கேட்கிறார்.

அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார்.

இதையடுத்து “நன்றி தங்கச்சி” என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் “நன்றி அண்ணா” என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.

தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார்.

அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார்.

அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார்.

வெண்ணிலாவின் “பேல் பூரி” என்று சுவைக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Comment