இனி பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment