புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்கீழூர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு சபாநாயகர் அமைச்சர்கள் மரியாதை

கீழூர் நினைவிடத்தில் நடந்த அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தியாகிகளுக்குசபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சாய்.சரவணக்குமார் ஆகியேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன்பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழூரில் நிறுவப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக கீழூர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கீழூர் நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சபாநாயகர் செல்வம் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்.சரவணக்குமார், துணைசபாநாயகர் ராஜவேலூ,அரசுகொறடா ஏ,கே.டி ஆறுமுகம் ஆகியோ் காவல்துறையின் மரியாதையை ஏற்றனர். அதன்பிறகு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றினார். தெர்ர்ந்து அங்குள்ள நினைவுத்தூணுக்கு மலர் தூவி, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். விழாவில் தலைமைச்செயலாளர் சவுத்கான்,மாவட்ட ஆட்சித்தலைவர் குலோத்துங்கன்,ஐ.ஜிஅஜித்குமார் சிங்லா,செயலர் பத்மாஜெய்ஸ்வால்,, மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் திளாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment