புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவிப்பு

புதுவை தமிழ் சங்கத்தில் தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான
நேரு(எ)குப்புசாமி . தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியின் போது புதுவை தமிழ் சங்கத் தலைவர் கலை மாமணி முனைவர் வி. முத்து மற்றும் தமிழ்ச்சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ் மற்றும் புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Related posts

Leave a Comment