ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூபாய் 100 ஐ கடந்து ரூ.101க்கு விற்பனை ஆகிறது.