புதுவை தவளகுப்பம் அடுத்தகாட்டுக்குப்பம் மராட்டாற்றில் புதிய மேம்பாலத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி கடலூர் சாலையில் தமிழக பகுதியான ரெட்டிச் சாவடிக்கும் காட்டு குப்பத்திற்கும் இடையே மலட்டாற்றின் குறுக்கே பாலமுள்ளது இது சிறிய பாலமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வந்தது. இதனால் இப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைபடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் செலவில் மலட்டாற்றில் புதிய பாலம் கட்ட கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். தற்பொழுது பணிகள் முடிவடைந்த நிலையில் பாலத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் எம் எல் ஏ லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீன தயாளன் கண்காணிப்பு பொறியாளர் வீர செல்வம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி பொறியாளர் ஜெயராஜ் இளநிலை பொறியாளர் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment