புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு கூட்டம் சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம்எம்.எல்.ஏ தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் புதிய பணிகள் தொடங்குவது குறித்தும் காலத்தோடு பணிகளை முடிப்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள பணிகளை தொடர்ந்து புதிய பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு செயலர் மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் பி ரமேஷ், சம்பத் , ரிச்சர்ட் ஜான்குமார் , பி எம் எல் கல்யாணசுந்தரம். நேரு. வைத்தியநாதன். வி பி ராமலிங்கம். நாக தியாகராஜன். செந்தில்குமார். பிரகாஷ் குமார், மற்றும் அரசு துறை செயலர்கள் ஆஷிஷ் மதராவ், மோர் ஜவகர் சட்டப்பேரவை செயலர் தயாளன் உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.