மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் பஞ்சவடி தலத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ வாரி வெங்கடாஜலபதி சன்னதியில் புரட்டாசி சனிக் கிழமைகளில் கோலாகல
வைபவங்கள் தொடர்பாக தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் .கோதண்டராமன் தெரிவித்திருப்பதாவது: திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல் இவ்வாண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற சிறப்பான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இதன்படி ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி 21.09.2024 முதல் சனிக் கிழமை விசேஷ பழங்களினால் அலங்காரம்
28.09.2024 இரண்டாம் சனிக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரம்03.10.2024 வியாழக் கிழமை விசேஷ திருப்பாவாடை ஸேவை 05.10.2024 மூன்றாம் சனிக்கிழமை முத்தங்கி சேவை12.10.2024 நான்காம் சனிக்கிழனை பூவங்கி சேவை ஆகியவை நடைபெறும்.
புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் விசேஜா அலங்காரப் பந்தலில் உற்சவர் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார், முற்பகல் 11.30 மணியிலிருந்து பகல் 1.00 மணி வரை வருகை தரும் பக்தர்கள்
அனைவருக்கும் வடை பாயசத்துன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடாகியுள்ளது. வழக்கம்போல் சிறப்பு அன்னப்ரசாதமும் வழங்கப்படும்.
மேலும் 0.9-70-,20.24 ம் தேதி விபாழக்கிழமை அன்று ஸ்ரீ வாரி! வெங்கடாஜலபுதி சன்னதியில் திருப்பதியில் நடைபெறுவதைப் போன்று விசேஷ ப்ரசாதம் பட்சனங்கள் மற்றும் பழங்களால் திருப்பாவாடை சேவை நடைபெற உள்ளது.. அன்று மதியம் சிறப்பு
ப்ரசாதமாக புளியோதரை வழங்கப்படும். மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளும் இச்சேஷத்திரத்தினை முழுமையாக நிர்வகித்து அரும் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி ஸேவா ட்ரஸ்ட்டினால் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் பெருந்திராளக் கலந்துகொன்டு அனைத்து சுவாமிகளின் திருவருளுக்கு பாத்திரர்களாகுமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.