புதுச்சேரி அக்.8-மணவெளி தொகுதி தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியில் உள்ள சீனிவாசா அப்பார்ட்மெண்ட் பகுதியில் செல்வம் மக்கள் இயக்கம் சார்பாக புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க நிர்வாகிகள் பாஜக மாவட்ட தலைவர் சுகுமார் துணைத் தலைவர் மணிகண்டன் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.