தென் மண்டல அளவில் 3ஆம் இடம் பிடித்த புதுச்சேரி வாலிபால் அணிக்கு எம்எல்ஏ தட்சணாமூர்த்தி பாராட்டு


புதுச்சேரி.அக்.19-காந்திராம் நற்பணி இயக்கம் மற்றும் புதுவை அமெச்சூர் வாலிபால் சங்கம் இணைந்து தெண்மண்டல பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது, இதில் தென்மண்டல 5 மாநிலங்களிலிருந்து 25 மாணவர் அணியினரும் 15 மாணவியர் அணியினர் என மொத்தம் 40 அணிகள் பங்கு பெற்று 600 மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டு விளையாடினர். 13 வயது முதல் 19 வயது வரை 5 பிரிவுகளின் கீழ் லீக் முறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடமும் கர்நாடகா இரண்டாவது இடமும் புதுச்சேரி மூன்றாவது இடமும் பிடித்தன, வெற்றபெற்ற அணிகளுக்குஅதற்கான வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது, இந்த நிலையில் மூன்றாம் பரிசு பெற்ற புதுவை அணியினரை இன்று காந்திராம் நற்பணி இயக்கத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி அவர்கள் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் அழைத்து விளையாட்டு வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார், அதனைத் தொடர்ந்து போட்டிகள் மற்றும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திய அனைவரையும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் காந்திராம் நற்பணி இயக்கத்தின் செயலாளர் காமராஜ், புதுவை அமெச்சூர் வாலிபால் சங்க செயலாளர் பெர்லின் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment