சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.
மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.