.புதுச்சேரி.நவ.2-புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையில் மலர் துாவி வணங்கினர்.
கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா, இன்று நடந்தது.
இதை முன்னிட்டு, முன்னோர்களின் கல்லறையை, அவரது குடும்பத்தார் பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையும் நடைபெற்றது.
புதுச்சேரியில் உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனுார் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.