தூத்துக்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ‘திடீர்’ ஆய்வு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்திதில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ‘திடீர்’ ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார்.தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இருந்தார்.

Related posts

Leave a Comment