முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாசிலைக்கு ஆளுநர் முதல்வர்- காங்கிரசார் மாலையணிவிப்பு

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன்,முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தனர்.
அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீ.ஜெயக்குமார், சாய்சரவணன் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி,ரமேஷ்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, வக்கீல் மருதுபாண்டியன், ஆர்.இ. சேகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment