பாகன் நினைவில் 3-வது நாளாக சாப்பிடாத தெய்வானை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானையை பராமரிக்க 3 பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாகன் உதயகுமார் என்பவர் இருந்தார்.

அப்போது அவரது உறவினரான சிசுபாலன் என்பவர் யானை முன்பு வெகு நேரம் செல்பி எடுத்ததால் தெய்வானை யானை ஆத்திரமடைந்து சிசுபாலனை தாக்கியது.

அப்போது பின்னால் இருந்து சிசுபாலனை காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரை பாகன் என்று தெரியாமல் துதிக்கையால் தள்ளியது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்தது பாகன் என்று தெரிந்ததும் யானை அவரை துதிக்கையா
யால் தட்டி எழுப்பி உள்ளது.

உதயகுமார் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் யானை மண்டியிட்டு அவரையே பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் போலீசார் உதயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க முற்பட்ட போதும் எடுக்க விடாமல் தடுத்துள்ளது.

அப்போது மற்ற பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் குமார் இருவரும் வந்து யானையிடம் அதற்குரிய பாஷையில் பேசி சமாதானப்படுத்திய பிறகே உடலை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த நேற்று முன்தினம் மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை பாகன் உதயகுமார் நினைவிலே இருந்த யானை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளது. மற்ற பாகன் இருவரும் சமாதானம் செய்த பின்பு வழக்கமாக கொடுக்கும் மெனுவில் உள்ள உணவு கொடுத்த போது சிறிதளவே சாப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழக அரசாணைகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டும் ஏன் நிறைவேற்றவில்லை? நீதிபதிகள் கேள்வி

சம்பவம் நடந்து இன்று 3-வது நாள் வரை சரிவர அதாவது இயல்பான உணவை உட்கொள்ளாமல் பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருகிறது. மேலும் பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று பார்த்தவாறு பாகன் நினைவிலே உள்ளது.

தற்போது யானையை பக்தர்கள் யாரும் பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ரேவதிரமன் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

5 நாட்களுக்கு பின்னர் தான் யானையை வழக்கமான பணிக்கு பயன்படுத்தலாமா? அல்லது முகாமிற்கு அனுப்பலாமா? என முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்துபோன உதயகுமார் உடலுக்கு கோவில் தக்கார் அருள்முருகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Related posts

Leave a Comment