வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடும் மழையை பெய்துவருகிறது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.