.
நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை.
புதுச்சேரி. டிச.12-புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்பியும் ஆன வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வைத்தியநாதன் எம் எல் ஏ காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் கவர்னர் கைலாசநாதனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது பெண்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மீண்டும் கிடைத்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் வெள்ளத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர்களுக்கான இழப்பு தொகையை 20 ஆயிரம் ஆகும் ஹெக்டர் பயிரிழப்புக்கு ரூபாய் 50,000 ஆகவும் கால்நடைகள் இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 50,000 ஆகவும் உயர்த்த வேண்டும் குடிசைகள் இழந்த மக்களுக்கு தலா முப்பதாயிரம் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவை அமைத்து புதுச்சேரி நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்க ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம் நிலையான நீர் மேலாண்மையை திட்டங்களை கொண்டு வர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஷாஜகான் முன்னாள் துணை சபாநாயகர் எம் என் ஆர் பாலன் முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.