அம்பேத்கரை அவமதித்தஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக–வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கையிள் ஏந்தி அவரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா டி. சரவணன், தலைமைச் செயற்குழு ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், ஆர். ரவீந்திரன், ப. இளம்பரிதி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், வே. மாறன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், வெ. சக்திவேல், சே. ராதாகிருஷ்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, தொமுச சூ. அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், விவசாய அணி வெ. குலசேகரன், மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், பொறியாளர் அணி ஆ. அருண்குமார், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment