உதவியாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசிய அமைச்சர்! பன்னீர்செல்வம்

தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தன் உதவியாளரை தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று(ஜன. 3) தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் விழாவில் வேளாண் துறை அமைச்சர் பேசத் தொடங்கும்போது தனது உதவியாளரை நோக்கி, “பரசுராமன் எங்கே, எருமை மாடாடா நீ, பேப்பர் எங்கே?” என்று கேட்டதும், உதவியாளர் குறிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.

ஆனால், அந்த பேப்பரை கையில் அவரிடமே தூக்கிப்போட்டுவிட்டார்.

இதனால் விழாவில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் அமைச்சருக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது.

Related posts

Leave a Comment