காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் . லட்சுமி சௌஜன்யா, தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி திருமதி. ஷாலினி சிங் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும்.

அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இவ்வாரம் மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர். லட்சுமி சௌஜன்யா. தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார், உதவி ஆய்வாளர்கள் முருகன், குமரன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை எழுத்து வடிவமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்தனர்.

மேலும் மது அருந்திவிட்டு தந்தை வீட்டில் உள்ள அனைவரையும் அடித்து துன்புறுத்துவதாகவும், முதியவர்களிடம் நகை மோசடி, கார் விற்பது தொடர்பாக பணம் மோசடி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டிலிருந்து பரிசு அளிப்பதாகக்கூறி பணம் மோசடி போன்ற புகார்கள் அளித்தார்கள். திருப்பட்டினம் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் எனவும், திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் உள்ள முக்கியை ஜங்ஷன்களில் பள்ளி நேரங்களிலும் பள்ளி முடியும் நேரங்களிலும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் போன்றவை கோரிக்கைகளாகவும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பொதுமக்கள் அளித்தனர். மேலும் நிகழ்ச்சியின் முன்னதாக கடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அளித்த புகர்களை தீர்த்து வைத்ததற்காக சம்பந்தப்பட்ட புகார்தளர்கள் மற்றும் பொதுமக்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் இதுகுறித்து விவரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் . லட்சுமி சௌஜன்யா தெரிவித்தார்கள்.

Related posts

Leave a Comment