மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் ரூ.16.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.
தவளக்குப்பம் பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக காந்தி நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காந்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் புதிய தார் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்தார்.
இதன்படி தார் சாலை அமைக்கும் பணிகளை துவங்கும் முகமாக பணிகளுக்கான பூமி பூஜை சட்டப்பேரவை தலைவர் முன்னிலையில் காந்தி நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர் சரஸ்வதி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா, சக்திவேல், மாவட்ட துணை தலைவர் மணி, சுப்பிரமணி, மூர்த்தி, புத்துப்பட்டான் மணி, முருகன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், ஆனந்தன், அசோக், ஞானசேகர், வினோத் ஆதி மற்றும் பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.