பேரனால் உயிருக்கு ஆபத்து தண்ணீரில் மூழ்கடித்து பேரனை கொலை செய்த தாத்தா


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது

சங்கீதா – பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பத்திற்க்கு கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்ணீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment