அரசுபள்ளி வகுப்பறையில் போதையில் உருண்ட ஆசிரியர்- மாட்டு கொட்டகையில் தூக்கி போட்ட மாணவர்கள்

தெலுங்கானா மாநிலம் கொத்த குடேம் மாவட்டம் திம்மாபேட்டை பஞ்சாயத்து ராஜிவ் நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

இதில் பதி பதி வீரய்யா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குடிபோதையில் பள்ளிக்கு வந்தார்.

மேலும் வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதும் வகுப்பறையில் தரையில் படுத்து புரள ஆரம்பித்தார். இதனை கண்ட பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதோ என எண்ணிய பெற்றோர் பள்ளிக்கு ஓடோடி வந்தனர். அங்கு வந்தபோது தான் ஆசிரியர் மது குடித்துவிட்டு போதையில் உருண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியரை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாட்டு கொட்டகையில் தூக்கிப் போட்டனர்.
மாட்டு கொட்டகையிலும் போதையில் உருண்ட ஆசிரியர் சில மணி நேரத்திற்கு பிறகு எழுந்து சென்றார்.

Related posts

Leave a Comment