சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டுள்ளது.
இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.