புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தொமுச பேரவை சார்பில், புதுச்சேரி தொழிலாளர் விரோத என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசையும், தொழிலாளர் துறையையும் கண்டித்து, தொழிலாளர் துறை வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி,. சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், எம்ஆர்எப், எம்பிடில், ஹைடிசைன், எல்&டி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் புதுச்சேரி அரசையும், தொழிலாளர் துறையையும், தொழிலாளர் துறை சமரச அதிகாரியையும் கண்டித்து…
Category: Uncategorized
புதுச்சேரி – கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி – கடலுார் சாலை ரெட்டிச்சாவடி மலட் டாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ரங்கசாமி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். புதுச்சேரி – கடலுார் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கி றது. ஆனால், சாலை தரம் உயர்த்தப்படாமலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செய்யப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு மேம்பாலம் குறுகலாக இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதனால், இந்த பாலத்தை அகலப்படுத்தி தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டம் சார்பில், ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்வர்…
சிறுபான்மையின சமுதாயத்திற்கு எதிராக வஃக்பு சட்ட திருத்தத்தின் மூலம் அடக்குமுறை – செல்வப்பெருந்தகை அறிக்கை
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வஃக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தெளிவாக கூறுகிறது. அதனால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவை பற்றி உறுப்புகள் 25 முதல் 28 வரை தெளிவாக கூறுகின்றன. இந்நிலையில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிற பாஜக ஆட்சியாளர்கள் மூன்றாவது முறை ஆட்சியில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக மோடி பொறுப்பேற்றாலும், அவரது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தில்…
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்-.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- பருவமழைக்கு முன்பே சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் மழை அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதே? பதில்:- எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கேள்வி:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண் டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளது. நீங்கள் (முதலமைச்சர்) பரிசீலிப்பீர்களா? பதில்- கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லையே. இவ்வாறு அவர் கூறினார். இதைத்…
டெல்லி அரசு தங்கும் விடுதியில் ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு சம்பவம் நீதி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
டெல்லியில் உள்ள அரசு தங்கும் விடுதியான ஆஷா கிரண் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் ரோஹினி பகுதியில் டெல்லி அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் (6 ஆண்கள், 8 பெண்கள்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஷா கிரண் தங்கும் விடுதி சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், சுயநினைவின்மை, லேசான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை உயிரிழப்புக்கு காரணங்களாக…
இந்திய சீன எல்லையின் பெயரை மாற்ற பாஜக எம்.பி கோரிக்கை
எல்லைப் பிரச்சனைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனையை சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடக விளங்கும் சீனா சமீப காலமாக திபெத், லடாக் எல்லாப் பிரதேசங்களில் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது, சீன வரைபடத்தில் இந்திய பகுதிகளில் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. இருநாட்டு வெளியுறவுத் துறையும் சம்பிரத்யமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், சீனா அதை செயலில் காட்டவில்லை. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா, லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை சட்டப்பூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட…
சிவகங்கையை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை- உறவினர்கள் சாலை மறியல்
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
TEST
TEEST
100 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகொண்டாட்டங்களுடன் களைகட்டிய தொடக்க விழா!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர். இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.…
tesey
testttt
