புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தொமுச பேரவை சார்பில், புதுச்சேரி தொழிலாளர் விரோத என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசையும், தொழிலாளர் துறையையும் கண்டித்து, தொழிலாளர் துறை வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி,. சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி வரவேற்று பேசினார்.
மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், எம்ஆர்எப், எம்பிடில், ஹைடிசைன், எல்&டி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் புதுச்சேரி அரசையும், தொழிலாளர் துறையையும், தொழிலாளர் துறை சமரச அதிகாரியையும் கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை அமைப்பாளர்கள் தைரிநாதன் .குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தங்கவேலு, வேலவன், சண்முகம், . ரவீந்திரன், பழநி, கோபாலகிருஷ்ணன், . அமுதாகுமார், . நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் . திராவிடமணி, சக்திவேல், . சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், நடராஜன், மணிகண்டன், சக்திவேல், தியாகராஜன், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், ரவிச்சந்திரன், சக்திவேல், . ராஜாராமன். இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், . கலைவாணன், தொமுச வை. காயாரோகணம், துரை, த. ராஜேந்திரன், சீனுவாசன், ரவி, கண்ணன், ரவி,. சிவக்குமார், மர்ஷேல் மற்றும் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.