மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காதீர்? – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ள ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், காவல்துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்திவருகிறது. முறையாக அனுமதி கோரப்பட்டு, மிகவும் அமைதியாக அறவழியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஸ்டாலின் மாடல் அரசு, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில்,…

4 மணி நேர பயணத்தில் 15 லிட்டர் மதுவை குடித்துத் தீர்த்த ஏர் இந்தியா பயணிகள்

டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புதிதாகவிமான சேவையை தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானமானது சூரத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்து பாங்காக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகக்ள் 4 மணி நேரத்தில் குடித்துத் தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது. அதாவது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது. விமானத்தில் மதுபானம் தீர்ந்துவிட்டது என்று பயணிகள் கூறும் வீடியோக்கள் வெளிவந்தன. 1.8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 15 லிட்டர் பிரீமியம் மதுபான வகைகள் அந்த விமானத்தில் இருந்ததாக…

பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக 27.08.2023 அன்று இள நிலைஎழுத்தர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 157 பேர்களில், இதுவரை 151 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 131 நபர்கள் பணியில் சேர்ந்து உள்ளனர். மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு, காத்திருப்போர் பட்டியலிலிருந்து 19 நபர்களுக்கு (10-ஆண்கள், 9-பெண்கள்) பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை- எடப்பாடி மீண்டும் உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி இல்லை.ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்.நான் வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக கட்சி தான். அதிமுக ஆட்சியில் தான் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சி தலைவி காலத்திலும், அம்மா மறைவுக்கு பின் அம்மாவுடைய அரசும் சரி நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க அதிமுக அரசு தான் காரணம் என்று கூறினார்.

தியாகிகள், தமிழறிஞர்கள் தங்களின் உதவியாளருடன் பேருந்தில் இலவசமாக செல்லலாம்- அமைச்சர் தகவல்

போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பஸ்சில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.6.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்து நர்கள் பின்பற்ற வில்லை எனத் தெரிய வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள்…

மத்திய அரசுதமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி வரி பகிர்வு தொகை விடுவிப்பு

தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு 7,268 கோடி ரூபாயை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ. 1,78,173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பீகாருக்கு 17,921 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாய், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாய், மகாராஷ்டிராவிற்கு 11,255 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அக்டோபர் மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதல் தவணையாக 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த வலிறுத்தி சுற்றுலாத்துறை இயக்குனரிடம் பாஜக மனு

புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த வலிறுத்தி சுற்றுலாத்துறை இயக்குனரிடம் பாஜக சமு்க ஊடக பிரிவு சார்பில் மனு அளிக்கப்பட்டது.புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரனை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடக மாநில தலைவர் ஶ்ரீ மகேஷ் ரெட்டி தலைமையில் வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில பொறுப்பாளர், ரௌத்திரம் சக்திவேல், பாஜக முக்கிய பிரமுகர் செல்வகுமாரன் முன்னிலையில் புதுச்சேரி சுற்றுலாவின் மேம்படுத்த மற்றும் முறைப்படுத்த சுற்றுலாத்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது; புதுச்சேரியை ஆன்மீக சுற்றுலா தளமாக அறிவிப்பு வெளியிட்டு சித்தர்கள் உடைய கையேட்டை வெளியிட்ட முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். புதுச்சேரி மாநிலம் அமைதி மாநிலம் என்று நமது மாநிலத்தை உலக அளவில் சுற்றுலாவை அமைதியும் ஆன்மீகமும் நிலைக்கட்டும் என்ற நாதத்தை மையப்படுத்தி இந்த ஆண்டு புதுச்சேரி உலக சுற்றுலா…

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துணை முதலமைச்சர், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்பு என கருதப்படும் நிலையில் கட்சி தொண்டர்கள் பலரும் அறிவாலயத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

புதுச்சேரி தொழிலாளர் துறையை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடந்தது

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தொமுச பேரவை சார்பில், புதுச்சேரி தொழிலாளர் விரோத என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசையும், தொழிலாளர் துறையையும் கண்டித்து, தொழிலாளர் துறை வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி,. சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், எம்ஆர்எப், எம்பிடில், ஹைடிசைன், எல்&டி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் புதுச்சேரி அரசையும், தொழிலாளர் துறையையும், தொழிலாளர் துறை சமரச அதிகாரியையும் கண்டித்து…

புதுச்சேரி – கடலுார் சாலையில் புதிய மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி – கடலுார் சாலை ரெட்டிச்சாவடி மலட் டாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதல்வர் ரங்கசாமி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். புதுச்சேரி – கடலுார் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கி றது. ஆனால், சாலை தரம் உயர்த்தப்படாமலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செய்யப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு மேம்பாலம் குறுகலாக இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதனால், இந்த பாலத்தை அகலப்படுத்தி தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டம் சார்பில், ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்வர்…