புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி…
Category: Uncategorized
மத்திய பிரதேசத்திற்கு சென்று பா.ம.க. நிர்வாகியை கைது செய்தற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட…
பாராளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் திமுக
பாராளுமன்றத்தில் அன்றாட அலுவல்களை தீர்மானிக்கும் அலுவல் ஆய்வுக் குழுவுக்கு 8 கட்சிகளைச் சோ்ந்த 14 உறுப்பினா்களை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிா்லா பரிந்துரைத்துள்ளாா். இதில் பாஜக கூட்டணி கட்சியைச் சோ்ந்த 8 உறுப்பினா்களும் ‘இந்தியா’ கூட்டணி கட்சியை சோ்ந்த 6 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனா். பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து இந்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனா். அதன்படி பாராளுமன்றத்தில் 240 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க. சாா்பாக பி.பி.சவுத்ரி, நிஷிகாந்த் துபே, டாக்டா் சஞ்சய் ஜெய்ஸ்வால், பா்த்ரு ஹரி மகதாப், பைஜயந்த் ஜெய் பாண்டா, அனுராக் சிங் தாக்குா் உள்ளிட்ட 6 உறுப்பினா்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசக் கட்சியை சோ்ந்த பிரதிநிதியாக லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலுவும், 12 உறுப்பினா்களைக் கொண்ட ஜக்கிய ஜனதா தளக் கட்சியைச்…
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியான சோகம்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர். இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர். அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார். பின்பு விடுமுறை…
நீட் வினாத்தாளுக்கு விடை-ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஹசாரிபாக்கில், தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டில் இருந்த நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன சிவில் என்ஜினீயர் பங்கஜ் குமாரை கைது செய்துள்ளது. அவருக்கு உதவி செய்த ராஜு சிங் என்பவரும், சுரேந்தர் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில்…
வலியில்லாமல் சாக தற்கொலை பாட் – அறிமுகம்ஆதரவு ஒருபக்கம் எதிர்ப்பு மறுபக்கம்
சுவட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும். ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள் நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால் மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைட்ரஜனாலும், 20.95% ஆக்சிஜனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் – டைஆக்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும். தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும்…
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் ‘சி மற்றும் டி’ கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் ‘கன்னட நிலத்தில்’ வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக…
ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம்-திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பது தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிராகரித்துள்ளது. மேலும் பல நூற்றாண்டுகளாக ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிகச்சிறந்த தரத்துடன் தயாராகி வருவதாகவும், பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பழங்காலத்திலிருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான கடமைகளை செய்கிறார்கள். அவர்களில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுகளை…
சத்தீஸ்கர் எல்லையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில்ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். 12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமியின் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கில் அவரது முன்னாள் மேலாளர் அழகப்பன் கைது
திரைப்பட நடிகை கவுதமி மற்றும் அவரது சகோதர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கவுதமியின் முன்னாள் மேலாளர் அழகப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போஸீஸார் இன்று காலையில் கைது செய்தனர். தமிழ் சினிமாவில் பல்வேறு முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை கவுதமி. இவருக்கும், இவரது சகோதரர் ஸ்ரீகாந்துக்கும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 3.21 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்பனை செய்ய தன்னிடம் மேலாளராக இருந்த அழகப்பன் என்பவருக்கு கவுதமியும், ஸ்ரீகாந்தும் பவர் கொடுத்துள்ளனர். ஆனால், அழகப்பன் தனது கூட்டாளிகள் ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மோசடியாக அந்த நிலத்தை விற்பனை செய்ததுடன், பணத்தை சரிவர கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து நடிகை கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த…
