புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 12 ஆம் தேதி திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 6 ஆம் தேதி திறக்க இருந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக பள்ளிகள் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என புதுவை கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தோ்வுக்கான அனுமதி சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பெறலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குருப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அம்மன் கோவிலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சாமி தரிசனம்

இலங்கை நாட்டிற்கு சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று 27.05.2024 இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயம் மற்றும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.பொன்னம்பல வான சுவாமிகள் ஆலயத்தில் இந்து மத குருமார் தலைவர் சுவாமி சிவாச்சாரியார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வுகளில் இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அரசியல் ஆலோசகரும் நேர்முக உதவியாளருமான திருமதி உமாச்சந்திர பிரகாஷ் உடனிருந்தார். முன்னதாக இந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர் சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் சட்டப்பேரவை தலைவர் அவர்களுடன் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜெயக்குமார் ரெட்டியார் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வருன் மற்றும் இராஜன்…

புதுச்சேரி மாநில திமுக செயற்குழுக் கூட்டம்

அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு! புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில கழக துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., அ. தைரியநாதன், ஏ.கே குமார், மாநில பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தீர்மானங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: – இந்திய அரசியல் வரலாற்றில் ஜனநாயக பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகாலம் தமது அயராது உழைப்பால் கட்டிக்காத்து –…

திரைப்பட பாணியில் கைவரிசை.. ஓடும் லாரியில் இருந்து கொள்ளையடித்த பைக் திருடர்கள்- வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில்…

இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: இதுவரை நடந்த 6 கட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் 10 ஆண்டு பிரதமர் ஆக இருந்து என்ன செய்தேன் என மோடி பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை வசை பாடுவதும் காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் பிரதமர் மோடி அமித்ஷா பாஜக தலைவர்கள் செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாத கட்சி அயோத்தி கோவிலை இருக்கும் கட்சி காங்கிரஸ் என பொய் பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் மனநலம் பாதித்தவர் போல் அவதார புருஷன் என பேசி வருகிறார். அவர் உளறுவதில் இருந்து பாஜக படுதோல்வி அடையமென தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்பி தொகுதிகளை கைப்பற்றும். பாஜக கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி…

புதுச்சேரியில் பிஎஸ்‌என்‌எல்‌ சிறப்பு விற்பனை முகாம்‌நாளைமுதல் முதல்‌ 4 நாட்கள்‌ நடைபெறுகிறது

புதுச்சேரி பிஎஸ்‌என்‌எல்‌ முதன்மை பொதுமேலாளர்‌வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்‌ கூறியிருப்பதாவது:புதுச்சேரி பிஎஸ்‌என்‌எல்‌ சிறப்பு மேளா விற்பனைமுகாம்‌ வருகிற திங்கள்‌ கிழமை முதல்‌ வியாழக்கிழமை கிழமை வரை 27, 28, 29 மற்றும்‌ 30 ஆகிய 4 நாட்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்‌ மேட்டுப்பாளையம்‌, முதலியார்பேட் போஸ்ட்‌ ஆபீஸ்‌ அலுவலகம்‌ அருகில்‌,கரியமாணிக்கம்‌, கொம்பாக்கம்‌ அரசு உயர்நிலைப்பள்ளிஅருகில்‌, மதகடிப்பட்டு, வில்லியனூர்‌, ரங்கபிள்ளைவீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம்‌ இடங்களில்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள்‌ தங்கசுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல்‌ அதி வேக எப்டிடிஎச்‌ தொழில்நுட்பத்துற்கு தங்கள்‌ லேண்ட்லைன்‌ எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம்‌. அதற்கான மோடம்‌ முற்றிலும்‌ இலவசம்‌. புதிய எப்டிடிஎச்‌ இணைப்பு ரூ.329 முதல்‌ மற்றும்‌ கிராமப்புறங்களில்‌ ஆறு மாதங்களுக்கு ரூ.999 க்கு கிடைக்கும்‌. ரூ..269 மதிப்புள்ள சிம்‌ கார்ட்‌ ரூ.50 மட்டுமே. இந்த சிம்‌ கார்டில்‌ 45 நாட்களுக்கு…

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி 526 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்

பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும், 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது: புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 012 பேர் தேர்வு எழுதினர். இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம்,…

புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில தொமுச சார்பில் மே தினம் கொண்டாட்டப்பட்டது.அதில் 30 இடங்களில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தொமுச சார்பில் சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக்கல்லூரி, கதிர்காமம், புவன்கரே வீதி ஆட்டோ ஸ்டேண்ட், மூலகுளம் ஆட்டோ ஸ்டேண்ட், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ தொழிற்சங்கங்கள், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, வில்லியனூர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம், நோணாங்குப்பம் போட்ஹவுஸ் உள்ளிட்ட 30 இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன்,…

தமிழக அரசு நிதியுதவியுடன்அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல் புதுவை தலைமை நீதிபதி வெளியிட்டார்

புரட்சிக்கவிஞர்‌ பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ 134-ஆம்‌ பிறந்தநாள்‌ விழா. உலகத்‌ தமிழ்மொழி நாள்‌ – உலகத்‌ தமிழ்க்‌ கவிஞர்‌ நாள்‌ விழா  கொண்டாடப்பட்டது. இதில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் அரபுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.புதுவை தமிழ் சங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதிதாசனின் பேரன் பாரதி தலைமை தாங்கினார்.பாவலா் இராஸ்ரீமகேஷ் வரவேற்றாா்.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத் தலைமை நீதிபதி த.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு , அரபு மொழியில் மொழி பெயா்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதல் படியை வெளியிட்டாா். அதனை, புதுச்சேரி அரபிக் ஆய்வு மைய நிறுவனா் சையது நிஜாமிஷாஹ் நூரி பெற்றுக் கொண்டாா். விழாவில் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவா் வி. முத்து பாராட்டிப் பேசினாா். மதுரை அரபிக் கல்லூரி முதல்வா் முஹம்மத் முஸ்தஃபா நூலின் சிறப்பினை எடுத்துரைத்தாா். நூலாசிரியா் ஜாகிா் ஹூசைன் ஏற்புரையாற்றினாா். விழாவில்…