புதுச்சேரி பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர்வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி பிஎஸ்என்எல் சிறப்பு மேளா விற்பனைமுகாம் வருகிற திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை கிழமை வரை 27, 28, 29 மற்றும் 30 ஆகிய 4 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மேட்டுப்பாளையம், முதலியார்பேட் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில்,கரியமாணிக்கம், கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிஅருகில், மதகடிப்பட்டு, வில்லியனூர், ரங்கபிள்ளைவீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கசுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல் அதி வேக எப்டிடிஎச் தொழில்நுட்பத்துற்கு தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம். புதிய எப்டிடிஎச் இணைப்பு ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999 க்கு கிடைக்கும். ரூ..269 மதிப்புள்ள சிம் கார்ட் ரூ.50 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசம். பிற நெட்வொர்க் கில் இருந்து (எம்என்பி மூலம்] பிஎஸ்என்எல்-க்கு வருபவர்களுக்கு ரூ..269/ மதிப்புள்ள சிம் முற்றிலும் இலவசம். தற்போதுள்ள 2 ஜி 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக 4ஜி சிம்மிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பிஎஸ்என்எல் சிறப்பு விற்பனை முகாம்நாளைமுதல் முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது
