தமிழ்நாடு அரசின் மருத்துவக் கட்டமைப்பு, சாதனைகள்- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மா. சுப்ரமணியன் விளக்கம்

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்குஎனது சிரம் தாழ்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. 1923 இல் தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பின் மூலம் முன்னோடியாக பல்வேறு பொது சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஏழை எளியோர்களுக்காக 23.07.2009 அன்று காப்பீடு திட்டத்தை தொடங்கியவர் 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்த திட்டம் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக” கடந்த…

கனகசபையில் சாமி தரிசனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை- ஐகோர்ட் உத்தரவு

சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ”கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை…

இடைத்தேர்தலில் வன்னிய மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை திமுக தலைமை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தங்களால் இழைக்கப்பட்ட சமூக அநீதியை ஒப்புக்கொண்டதன் மூலம் இதுவரை திமுக போட்டு வந்த சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது. கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,”தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட…

குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம்: ஒருநபர் குழு அமைப்பு-தமிழக முதலமைச்சர் உத்தரவு

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும்…

நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள்-சீமான் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு.ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது பாதிக்கும்போது உங்களுக்கு புரியும். இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம்என்பதால் சிறுபான்மை. இவ்வாறு அவர் பேசினார்.

இன்றுடன் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார்.…

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே ஜூலை 5ல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் 110 ஆவது காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் அருண். சென்னையில் காவல் துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி, மதுரையில் ஆணையராக பதவி வகித்தார். ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர்…

அதிமுகவிற்கு பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை-அமைச்சர் உதயநிதி பேச்சு

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்; தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. காலை உணவுத் திட்டம் மூலம் விழுப்புரத்தில் 66,000 மாணாக்கர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப் பெண் திட்டம் மூலம் விழுப்புரத்தில் 10,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர். பெட்ரோல், பால் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான8 இடங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை முடிந்தது

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து…

கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் சாவு- கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.