உலகளவில் முடங்கியது எக்ஸ் தளம்- டவுன்-டிடெக்டர் அறிவிப்பு

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர். திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.

ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம்தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையமும் அமைகிறது

வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஈட்டன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல்…

வடகொரிய வெள்ள நடவடிக்கை கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்?

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில், அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள்,சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வட மேற்கு பகுதிகளில் உலா சின்உய்ஜூ[Sinuiju], உய்ஜூ Uiju உள்ளிட்ட நகரங்களின் அதிக அழிவுகள் நிகழ்ந்துள்ளன.வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து…

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்றனர்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார். இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா…

ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த வீடியோவை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை” என்று பதிவிட்டுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வென்றது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம். இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாசுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக…

பார்முலா 4 கார் பந்தயம்- வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசு வழங்கினார்

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர். நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில்…

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார் பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

வடகொரியாவுக்கு 22 குதிரைகளை பரிசாக வழங்கிய ரஷியா

உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து…