ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டல் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரக பகுதியில் குட்கா புகையிலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பணபேரம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையின் அடிப்படையில், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவக்குமார் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த சந்தனகுமார் ஆகிய 2 பேரும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு பணி செய்து வந்த பாரதி நகரை சேர்ந்த சேகர்(வயது40) என்பவரை முறைகேடாக மதுபானம் விற்பனை…

திமுகவின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவாக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்யுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்; வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை! உங்கள் மண்ணின் மைந்தர் அவர்! மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான் அன்னியூர் சிவா. 1986-ஆம் ஆண்டு முதல்,…

சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில்…

இனி பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்துஅனுப்பார்பாளையம் போலீசார் விசாரணை

திருப்பூர் அனு ப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். 3 மாடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை பின்னலாடை நிறு வனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது. இதனைப பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு…

தி.மு.க.வின் அத்துமீறல்களை முறியடித்து பா.ம.க. வெற்றி பெறும்- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது. பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத…

பண்ருட்டியில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்ட பெட்ரோல் பங்க் சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.இதனையடுத்து, பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டது.பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

8 தமிழர்கள் போட்டியிடும் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியது . வாக்குப்பதிவு

பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன்…

கீழடியில் நடந்த 10-ஆம் கட்ட அகழாய்வு பணியில் செம்புப் பொருட்கள் கண்டெடுப்பு

மதுரையை அடுத்த கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் 9 கட்டமாக அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கீழடி, கொந்தகையில் 10-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் கீழடியில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 12 குழிகள் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழிகளில் ஏற்கனவே பல வண்ண நிறங்களில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடும் கண்டெடுக்கப்பட்டது. குழிகள் மேலும் 3 அடி ஆழத்திற்கு மேல்…

தமிழ்நாட்டின் ‘ டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு வருகிறது 90 மி.லி. மது ‘டெட்ரா பேக் திட்டம்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது டெட்ரா பேக்கில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.140-க்கு விற்கப்படுவதால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 90 மில்லி மது டெட்ரா பாக்கெட்டுகள் விற்பனை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி மது டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிறிய அளவிலான மது வகைகள்…