இந்தியா கூட்டணியின் தலைவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ராகுலை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவுடன் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், ராகுல் காந்தி ஸ்டாலினை சகோதரன் அழைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Category: தமிழ்நாடு
கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார். அவை வருமாறு:- தருமபுரி மாவட்டம், பெரும்பாலை…
மீண்டும் மினி தமிழக அரசு முடிவு
மீண்டும் மினி பஸ்ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியீடு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர்,…
நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! முதல்வர் மகிழ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி! நாடும்…
பேரனால் உயிருக்கு ஆபத்து தண்ணீரில் மூழ்கடித்து பேரனை கொலை செய்த தாத்தா
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது சங்கீதா – பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும்…
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, “தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!” என்று கூறியுள்ளார்
தமிழக தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து
பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:- நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்…
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் 2,140 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பங்கேற்று பல்வேறு ரெயில்வே துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40 லட்சத்து 19 ஆயிரத்து 516 பேர் கலந்து கொண்டனர். இந்திய அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்ட சாதனையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் தற்போது வழங்கியுள்ளது.
மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார். நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி. 40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர். திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க…
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சசிகலா கோரிக்கை
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில் இருந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு சென்னையிலேயே ஒரு சிறந்த இதயநோய் மருத்துவராக சேவையாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே மத்திய அரசு தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
